ஒசூர் வந்தடைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

TN CM M.K. Stalin arrives in Hosur

ஒசூர், அக்டோபர் 10:

கர்நாடக மாநிலம், ராம்நகரில் நடைபெறும் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமான மூலம் ஒசூர் பேளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்பேஸ் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய். பிரகாஷ், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் மதியழகன், ஒசூர் மாநகர மேயர் எஸ். ஏ. சத்யா, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ்குமார், துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் திமுக உறுப்பினர்கள் புத்தகம், சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் முதல்வர் அங்கு கார் மூலம் புறப்பட்டு பெங்களூரு, கனகபுரா மாவட்டத்தில் உள்ள ராம்நகருக்கு சென்றார். அங்கே நடைபெறும் முரசொலி செல்வம் சிலை திறப்பு விழாவில் சிறப்புரை வழங்கினார்.

மதிய உணவுக்குப் பிறகு பிற்பகல் ராம்நகரில் இருந்து ஒசூா் விமான நிலையத்துக்கு காரில் வந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுகிறாா்.

விமான நிலையத்தில் இருந்து தளி சாலை, சூசூவாடி, மாவட்ட எல்லை வரை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!