சென்னை, செப்டம்பர் 09:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் தொகுதிகள் பங்கீடு மற்றும் கூட்டணி அமைப்புகள் குறித்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு நடுவே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர் செல்வம் சமீபத்தில் கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளனர். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி சூழலில் குழப்பம் நிலவுகிறது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் (டெல்லி பயணம் மேற்கொண்டு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற மூத்த தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
இந்த பயணம், கூட்டணியில் உள்ள குழப்பத்தை தீர்வு காண்பதில் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. இதன் பின்னணியில் பாஜக கூட்டணியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் கூட்டமைப்புகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.