சென்னை, ஆகஸ்ட் 18:
தமிழ் திரையுலகை 50 ஆண்டுகள் சிறப்பாக ஆண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த சந்திப்பு ரஜினிகாந்தின் இல்லத்தில் நடைபெற்றது. இது குரித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது “இந்தியாவின் பத்ம விபூசண்! தாதா சாகிப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினேன். அவர் வாழ்த்துக்களைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தேன்!” என எழுதியுள்ளார்.
அவர் மேலும், “அரை நூற்றாண்டு காலத்திய இந்திய திரையுலகை ஆண்ட கலைஞன், நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும் என்றும் அழியாமல் காட்சி தரும் தேசிய நடிகர்! அண்ணன் ரஜினிகாந்த் தொடர்ந்து தாயகத்தின் பணிக்காக, இன்னும் பல நூற்றாண்டுகள் திரைஉலகை ஆண்டு விளங்க வேண்டும்” என இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் பதிவிட்டுள்ளார்.