சென்னை, செப்டம்பர் 24:
தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. இந்த விருதுகள் இசை, நாடகம், திரையுலகம் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கி வரும் கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அடுத்த மாதம் சென்னையில், கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருக்கும் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதாளர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது சான்றிதழ் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.
திரைத்துறையில் கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பட்டியல்
2021 ஆம் ஆண்டு
- எஸ். ஜே. சூர்யா
- சாய் பல்லவி
- லிங்குசாமி
- ஜே. கே. (எம்) ஜெயகுமார் (திரைப்பட அரங்க அமைப்பாளர்)
- சூப்பர் சுப்பராயன் (திரைப்பட சண்டைப் பயிற்சியாளர்)
2022 ஆம் ஆண்டு
- விக்ரம் பிரபு
- ஜெயா வி.சி. குகநாதன்
- விவேகா (பாடலாசிரியர்)
- டைமண்ட் பாபு (திரைப்பட செய்தித் தொடர்பாளர்)
- டி. லட்சுமிகாந்தன் (திரைப்பட புகைப்படக் கலைஞர்)
2023 ஆம் ஆண்டு
- கே. மணிகண்டன்
- எம். ஜார்ஜ் மரியான்
- அனிருத்
- ஸ்வேதா மோகன்
- சாண்டி (அ. சந்தோஷ்குமார்)
- நிகில் முருகன் (திரைப்பட செய்தித் தொடர்பாளர்)
மேலும், பாடகர் கே. ஜே. யேசுதாஸ் எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) பெறயுள்ளனர்.