சென்னை,ஆகஸ்ட் 16:
பணமோசடி வழக்கில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும், எம்எல்ஏ விடுதிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலை முதல் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் அரசு வசதிப் பங்களாவில், சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது மகன் மற்றும் பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில் குமார் அறையில் நடைபெற்று வருகிறது. மேலும், திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள அவரது மகள் இந்திராவின் மற்றும் சிலப்பாடியில் உள்ள பழனி சட்டமன்ற உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் ஐ.பி. செந்தில்குமார் வீடுகளில் அதேபோல் சோதனை நடைபெற்று வருகிறது.
தலைமைச் செயலகத்துக்குள் நுழையும் வழிகளில் வரும் வாகனங்கள் தீவிர சோதனையுடன் வரும் அனைவரும் பரிசோதனைக்குப் பிறகு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இச்சோதனையின் காரணமாக தலைமைச் செயலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பு நிலவியுள்ளது.
சோதனை நடைபெறுவதைக் கண்டு திமுக ஆதரவாளர்கள் அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீட்டிற்கு திரண்டு வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.