திருப்பத்தூர், ஏப்ரல் 01:
திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையாற்றினார்.
அங்கு அவர் பேசியதாவது, நான் தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். நானும் ஒரு வேட்பாளர். நானும் ஒரு தொகுதியில் நிற்கிறேன். ஆனால், நான் இன்னும் தொகுதிக்கே போகல. நீங்கள் வேட்பாளர்களை ஜெயிக்க வைத்தீர்கள் என்றால் தலைவரை ஜெயிக்க வைத்தது மாதிரி.
இந்தியாவிலேயே மோடியின் முரட்டு அடிமை யார் என்றால் எடப்பாடி பழனிசாமி அவர்கள். இதை சொன்னதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வந்துவிட்டது. என்னை உதயநிதி தரக்குறைவாக பேசியிருக்கிறார். நான் என்றைக்காவது அவரைத் திட்டியிருக்கிறேனா??
சிறுபான்மை மக்களுக்கு காவலாக திமுக இருக்கிறது.
சிஏஏ சட்டத்தை அதிமுக ஆதரித்தது. பாஜகவுடன் சேர்ந்து அதிமுக துரோகம் செய்கிறது. மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளோம். உரிமையாக வாக்கு கேட்கிறோம். டெல்லி அணி VS தமிழ்நாடு அணி என்பது தான் 2026 சட்டமன்ற தேர்தல். டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான். 10 தோல்வி பழனிசாமி அல்ல, இந்த சட்டமன்ற தேர்தலில் மொத்த தோல்வி பழனிசாமி என மாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

