இன்று முதல் புதிய ஜிஎஸ்டி வரி அமலாகிறது!

The new GST tax comes into effect from today!

இந்தியா, செப்டம்பர் 22:

நாடு முழுவதும் இன்று முதல் 5% மற்றும் 18% என்ற இரண்டு மட்டுமே சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் அமலுக்கு வருகிறது. இதுவரை ஜிஎஸ்டி வரியுடன் வாங்கி வந்த சில பொருள்கள் இனி பூஜ்ய வரியில் விற்கப்படும்.

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் கடந்த செப்.3ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் காரணமாக பல பொருட்கள், சப்பாத்தி, பரோட்டா, பன்னீர், ஐஸ்கிரீம், தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிச் சார்ந்த வரிவிலக்குகளைப் பெறுகின்றன. மருத்துவ மற்றும் தனிநபர் ஆயுள் காப்பீடுகள் ஜிஎஸ்டி விலக்கிற்கு உட்பட்டுள்ளன.

இந்திய ரயில்வேயில் விற்பனை செய்யப்படும் நீர், குடிநீர் பாட்டில்கள் போன்ற அடிப்படை பொருட்களின் விலை குறைந்துள்ளன. இதற்கு ஏற்ப, ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட ரயில் நீர், இன்று 1 ரூபாய் குறைந்து ரூ.14 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெண்ணெய், நெய், உலர் பழங்கள், சீஸ், இறைச்சி போன்றவை 5% வரி வாங்கும் பொருட்களின் விலை குறைந்து, பால் பாட்டில்கள், சைக்கிள், புத்தகங்கள் போன்றவை 5% வரிக்கு உட்பட்டுள்ளன.

இதேபோல், வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஜிஎஸ்டி குறைப்பின் முழு நன்மையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விலை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

டிவிஎஸ் மோட்டார்களின் வாகனங்கள் ஜிஎஸ்டி 28% இலிருந்து 18% வரை குறைக்கப்பட்டு விலை குறைப்பு கொண்டு வருகின்றன. மஹிந்திரா & மஹிந்திரா வாகன விலைகள் ரூ.1.01 லட்சம் முதல் ரூ.1.56 லட்சம் வரை குறைந்துள்ளன. டாடா மோட்டார்ஸ் வாகனங்கள் 65,000 முதல் 1.55 லட்சம் வரை விலை குறைப்பு பெற்றன.

இந்த புதிய ஜிஎஸ்டி 2.0 வரி கட்டமைப்பு மக்களின் வாழ்வாதாரத்தில் விலைச் செலவுகளை குறைக்கும் வாய்ப்பைத் தருகிறது. அதோடு பொருளாதாரம் மீண்டும் துயக்கின்ற வளர்ச்சியை காணும் என்று நிதியமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் வீட்டுவசதி பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், வாகனங்கள், கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் போன்றவற்றில் பொதுமக்களுக்கு பணச் சுருக்கம் ஏற்படாமல் விலைகள் எளிதாகக் கிடைக்கும் சூழல் உருவாகும்.

மேலும் எந்தவொரு பொருளையும் வாங்கும் போது புதிய MRP மற்றும் பில் சரிபார்க்கப்பட வேண்டுமென நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு