மத்திய அரசைத்தான் ஆளுநர் கேட்க வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின்

Tamil Nadu government boycotts Governor tea party

சென்னை, ஜனவரி 24:

ஆளுநர் உரையில் மாற்றுக் கருத்து இருந்தால், மத்திய அரசைத்தான் ஆளுநர் கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் திராவிட மாடல், மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம் என்ற தலைப்பில் “ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு நான் அளித்த பதிலுரை, ஆளுநருக்கே அளித்த விளக்கவுரையாக, 5 ஆண்டு சாதனை அறிக்கையாக அமைந்துவிட்டது.

தமிழ்நாடு ‘நம்பர் 1’ என நாம் ஆளுநர் உரையில் குறிப்பிட்டதில் ஆளுநர் ரவி-க்கு மாற்றுக்கருத்து இருக்குமேயானால், அவர் மத்திய அரசைத்தான் கேள்வி கேட்க வேண்டும்.

ஏனென்றால், நாம் சொன்னது அனைத்தும் மத்திய அரசு அளித்த தரவுகள்தான். 2021-இல் நிர்ணயித்த இலக்கில் வென்றுவிட்டோம்! இனி 2026-லும் வெல்வோம் ஒன்றாக” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முதியோர் ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைப்பு – முதலமைச்சர் அதிரடி

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக