சென்னை, அக்டோபர் 25:
நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருந்த மகேந்திரனின் சர்வைவல் த்ரில்லர் திரைப்படமான ‘பல்ஸ்’ விரைவில் வெளியாக உள்ளது. குளோபல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அழகர்ராஜ் ஜெயபாலன் தயாரிப்பில், ‘எக்கோ’ திரைப்படத்தை இயக்கியிருந்த நவீன் கணேஷ் இதனை எழுதி இயக்கியுள்ளார்.
படத்தில் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக புதுமுக நடிகையான ரிஷிகா ராஜ்வீர் நடித்துள்ளார். மூத்த இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், லிவிங்ஸ்டன், கும்கி அஷ்வின், கூல் சுரேஷ், KPY சேது மற்றும் சரத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘பல்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா வெளியிட்டார். இது குறித்து தனது சமூக வலைத்தளங்களில், “மாஸ்டர் மகேந்திரன் மற்றும் ரிஷிகா ராஜ்வீர் நடித்துள்ள ‘பல்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. படக்குழுவினருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!” என குறிப்பிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனையைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சர்வைவல் த்ரில்லர் திரைப்படம், ஒரு முக்கியமான சமூக பிரச்னையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சென்னை, பொள்ளாச்சி, ஷோலிங்கூர், அரக்கோணம் ஆகிய இடங்களில் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மாஸ்டர் மகேந்திரன் தனது கதாபாத்திரத்தில் புதிய ஆளுமையைக் காட்டியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.