டெஸ்லாவின் அதிவேக மின்சார SUV: புதிய மாடல் அறிமுகம்

Tesla's fastest electric SUV: New model introduced

டெஸ்லா நிறுவனம் புதிய மாடல் Y பெர்ஃபார்மன்ஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல், டெஸ்லாவின் மிகப் பிரபலமான மின்சார SUV மாடலின் உயர்ந்த செயல்திறன் பதிப்பாகும்.

இந்த “ஜூனிபர் அப்டேட்” எனும் புதிய வேரியண்ட், மேம்பட்ட RWD மற்றும் நீண்ட தூர வேரியண்ட் மாடல்களுடன் கூடியது. வெளியே, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள், கார்பன் ஃபைபர் பின்புற ஸ்பாய்லர் போன்ற முக்கிய மாற்றங்கள் உள்ளன. 21-இன்ச் அராக்நிட் 2.0 அலாய் வீல்கள் மற்றும் சிவப்பு நிற பிரேக் காலிப்பர்கள் காருக்கு ஸ்போர்ட்டான தோற்றத்தை தருகின்றன. உள்ளே, கார்பன் ஃபைபர் அசென்ட்கள், 16-இன்ச் அல்ட்ரா HD இன்ஃபோடெயின் டிஸ்ப்ளே மற்றும் ஹீட்டிங், கூலிங் வசதியுடன் கூடிய எலக்ட்ரிக் அட்ஜஸ்ட் முன்பக்க இருக்கைகள் பிரீமியம் அனுபவத்தைக் கொடுக்கின்றன.

இந்த “மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்” வேரியண்ட், டூயல் மோட்டார் AWD அமைப்பை கொண்டுள்ளது. இது சுமார் 460 பிஹச்பி மற்றும் 751 நியூட்டன்-மீட்டர் டார்க் சக்தியை வழங்குகிறது. ஆகவே, 0-100 கிமீ வேகத்தை 3 வினாடிகளில் அடையும் திறன் கொண்டது. இந்த புதிய SUV அதன் பிரிவில் மிக வேகமான மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றமான மாடல்களில் ஒன்று ஆகும். இது வாகன செயல்திறன், காற்றியக்கம் மற்றும் ஸ்போர்ட்டான வடிவமைப்பில் மேம்பட்டது.

மாடல் Y பெர்ஃபார்மன்ஸின் இந்த புதிய பதிப்பால், மின்சார வாகனங்கள் மற்றும் SUV சந்தையில் டெஸ்லா நிறுவனம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஹோண்டா ஆக்டிவா இ மாடலுக்கு புதிய வசதி

கவாசகி நிஞ்ஜா ZX-6R பைக்கில் எஞ்சின் குறைபாடு

நீண்ட வீல்பேஸ் கொண்டு தயாராகும் டெஸ்லாவின் மாடல்-YL கார்