சென்னை, நவம்பர் 24:
தென்காசியில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பலியானேரின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் எதிரெதிரே வந்த 2 தனியார் பேருந்துகள் இன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.