“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” விழாவில் தெலங்கானா முதல்வர் பங்கேற்பு

Telangana CM participates in TN education event

சென்னை, செப்டம்பர் 22:

சென்னையில் அரசு செய்தித்தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ். இன்று செய்தியாளர் சந்திப்பில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற தலைப்பில் செப்டம்பர் 25-ஆம் தேதி விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியிட்டார். இவ்விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் தமிழ்நாடு அரசு கல்வித் துறையில் குறிப்பான சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களை வெளிப்படுத்த 7 முக்கிய திட்டங்கள் பிரதானமாக அமையும். இவற்றுள் “நான் முதல்வன்,” “தமிழ் புதல்வன்,” மற்றும் “புதுமைப்பெண்” போன்ற திட்டங்கள் அடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்திரனாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்துகொள்ள உள்ளார்.

மேலும் அமுதா ஐ.ஏ.எஸ். கூறியதாவது, “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் இதுவரை 14.60 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். “புதுமைப்பெண்” திட்டம் மூலம் 5.29 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். மேலும், “தமிழ்ப்புதல்வன்” திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகிறது. கடந்த ஆண்டை விட வேலை வாய்ப்புகள் ஒரு லட்சம் பேருக்கு அதிகரித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை