ஜன. 20-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்!

Tamil Nadu Budget Session to continue till Feb. 20 - Appavu

சென்னை, டிசம்பர் 26:

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன. 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்தாண்டு 2026 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும். ஆளுநர் ஒப்புதலுடன் ஜன. 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. அன்றைய நாளே தமிழக முதல்வர், அமைச்சர்களால் தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிப்பார். வரும் ஜன. 20 ஆம் தேதி காலை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளை உள்வாங்கி நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை