மானிய விலையில் இ-ஸ்கூட்டர் திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

Subsidized e-scooter scheme: CM launched the program!

சென்னை, ஜனவரி 05:

மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை, தீவுத்திடல் வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (GIG) தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு மானிய விலையில் (e-scooter) இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

மேலும், வருவாய் துறையில் பணிபுரியும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலர்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக 13 கோடியே 73 லட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களை (Mahindra Bolero B4 AC BS-VI) வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Related posts

முதியோர் ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைப்பு – முதலமைச்சர் அதிரடி

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக