2
மதுரை, மார்ச் 04:
மதுரை சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “ கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைத்துள்ளது தெற்கு ரயில்வே.
“ கர்தவ்ய த்வார்” என்றால் தமிழில் “ கடமையின் நுழைவுவாயில்” என்று பொருள். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை “ இந்தித் திணிப்பு” மட்டுமே.
தெற்கு ரெயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.