15
சென்னை: கோவையில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துகளை கண்டித்து, சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி முன்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
எடப்பாடி பழனிசாமி தனது பேச்சில், கோவில் வருமானத்தில் இருந்து தி.மு.க. அரசு கல்லூரிகள் கட்டப்படுவது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். அவர், கோவில் உண்டியலில் வரும் பணத்தை கல்லூரி கட்டுவதற்கு பயன்படுத்துவது சரியல்ல என்றும், இது ஒரு சதிச்செயல் என விமர்சித்துள்ளார்.இந்த கருத்துக்களை எதிர்த்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.