சென்னை, டிசம்பர் 02:
சென்னைக்கு அருகில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமான டிட்வா புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் டிட்வா புயலனாது நேற்று (டிசம்பர் 1) காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்களில் தொடர் கனமழை பெய்கிறது. இப்போது சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள தாழ்வு மண்டலம் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.
டிட்வா புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் இது மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, இன்றிரவு கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.