டெல்லி, செப்டம்பர் 18:
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் திருடர்களை பாதுகாப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் ஆலந்து சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் ஆதரவாளர் சுமார் 6,000 வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்துள்ளதாக முன்வைத்தார்.
ராகுல் கூறியதாவது, தலைமைத் தேர்தல் அதிகாரியை அவர் நேரடியாக தொடர்பு கொண்டு, வாக்காளர்களை நீக்க முயற்சித்த விவகாரம் தொடர்பாக கர்நாடக சிஐடி தரப்பிலிருந்து இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு 18 முறை கடிதம் அனுப்பப்பட்டதாகும். அந்த கடிதங்களில், ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட ஐபி முகவரி, ஓடிபி தடங்கள் போன்ற எளிய தகவல்கள் மட்டும் கோரப்பட்டதாகவும், ஆனால் தேர்தல் ஆணையத்திலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செயல்களுக்கு ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாப்பு வழங்கி இருப்பதாகவும், ராகுல் கவலை தெரிவித்தார். ஜனநாயக அமைப்பில் பங்கேற்பது தான் எனது வேலை. பாதுகாப்பது எனது வேலை அல்ல. தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களின் வேலை அது. அவர்கள் பாதுகாக்காததால், அந்த வேலையை நான் செய்கிறேன். அனைத்து இடங்களிலும் வாக்குத் திருட்டு நடந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அது உறுதி என்றும் கூறினார்.
“தேர்தல் ஆணையத்துக்குள் இருந்து சிலர் நமக்கு தகவல் வழங்க ஆரம்பித்துள்ளனர். இது இது நிற்கப் போவதில்லை. தேர்தல் ஆணையர் திருடர்களை பாதுகாக்க வேண்டிய வேலையை நிறுத்தி, இந்த 100% ஆதாரங்கள் கொண்ட தொலைபேசி தரவுகளையும் ஓடிபி விபரங்களையும் அடுத்த ஒருவாரம் கிழித்து வெளிப்படுத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
இந்தச் சர்ச்சையான குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையத்தின்மீது விசாரணைகள் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.