திருச்சி மரக்கடை பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
“அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனநாயகப் போருக்கு முன்பு உங்களை சந்திக்க வந்தேன். திருச்சியில் தொடங்குவது திருப்புமுனையாக அமையும். அண்ணா முதலில் தேர்தலில் நின்றது இங்குதான்; எம்.ஜி.ஆர் முதல் மாநாடும் இதே இடத்தில் நடந்தது. பெரியார் வாழ்ந்த கொள்கை உள்ள மண் இது.”
நீட் தேர்வையும் மாணவர்களின் கல்விக் கடனையும் ரத்து செய்வோம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுனீர்களா? மக்கள் நலப் பணியாளர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுனீர்களா? பழைய ஓய்வுத்திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்?
இலவச பேருந்து திட்டத்தை அறிவித்துவிட்டு ஓசி என மக்களை அவமானப்படுத்துகிறார்கள். மகளிர் உதவித் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை.
“கல்வி, மருத்துவம், அடிப்படை சாலை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு போன்றவையே நாங்கள் உறுதி செய்கிறோம். இவற்றில் சமரசம் செய்வது எங்கள் நோக்கம் அல்ல” என வலியுறுத்தினார்.
ஆரம்பத்தில் பேசும் விஜய்க்கு மைக் கோளாறு ஏற்பட்டதால், அவரது உரையை மக்கள் பெரும்பாலும் கேட்க முடியவில்லை. காலை முதலே எதிர்பார்த்தும் காத்திருந்த தொண்டர்கள் இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.