எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினால் கைது

35 fishermen arrested – Sri Lankan Navy

ராமேஸ்வரம், ஜூலை 29:

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இப்போது ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள், வழக்கம்போல் விசைப்படகில் கடலுக்குச் சென்றபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இலங்கை கடற்படை ரோந்து மேற்கொண்டு, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தி 9 பேரையும் கைது செய்தது. அதோடு, அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட அனைவரும் புத்தளம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து, ஏற்கனவே நேற்று நள்ளிரவு ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவ அமைப்புகள்,மத்திய மற்றும் தமிழக அரசுகள் உடனடியாக தலையிட்டு, கைதான மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்புற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

புதிய ஊரக திட்டத்தால் வேலைபெறுவோரின் எண்ணிக்கை குறையும்! – ஓபிஎஸ்

அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடி காவிக்கொடியை ஏற்றினார்!

தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் பரபரப்பு கடிதம்