தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு நல திட்டங்கள்- தங்கம் தென்னரசு அறிவிப்பு

Special welfare schemes for sanitation workers - Thangam Thenarasu

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான பல்வேறு சிறப்பு நல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும் நேரத்தில் நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமாக தொழில்சார் நோய்கள் பரவுவதை தடுக்கும் தனி சிகிச்சை திட்டம் உருவாக்கப்பட உள்ளது, பணியின்போது தூய்மைப் பணியாளர்கள் இறந்தால் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படும், நகரப்பகுதிகளில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுக்குள் வீட்டுக்கான வசதி நல வாரியத்தால் வழங்கப்படும். கிராமப்புற மக்களுக்கு “கலைஞர் கனவு வீடு” திட்டத்தில் முன்னுரிமை, அதிகாலை நேர பணிகளுக்கு விடியற்காலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்துள்ளார்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டபடி, அரசாங்கம் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களுக்கான நலனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் எனவும், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு தூய்மைப் பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை