தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி – அடுத்த வாரம் தேதி அறிவிப்பு

Special voter list revision work in TN – Date to announced next week

சென்னை, அக்டோபர் 24:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணி, இந்த ஆண்டு தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்2 என்ற வடிவில் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதி அடுத்த வாரம் தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட உள்ளது.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்–நவம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடைபெறும். அதற்கு முன்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதில், மக்கள் தங்களது பெயர், முகவரி போன்ற விவரங்களை சரிபார்த்து, பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்க, புதிய வாக்காளர்கள் பதிவு செய்ய, தேவையான திருத்தங்களைச் செய்யலாம்.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் திருத்தப் பணி வழக்கத்தை விட மிகவும் விரிவானது, வரவிருக்கும் 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் முழுமையடைய இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதன்வீழ்ச்சியாக, ஒவ்வொரு வாக்குச்சாவடி மட்டத்திலும் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வீடு தோறும் சென்று விண்ணப்பப்படிவங்களை வழங்கி, விவரங்களைச் சேகரிப்பார்கள்.

திருத்தக் காலத்தில் தாக்கல் செய்யப்படும் அனைத்து விண்ணப்பங்களும் டிசம்பர் மாதத்தில் சரிபார்க்கப்பட்டு, ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

முன்னதாக உள்ள வாக்காளர் பட்டியலில் தம்முடைய பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை மக்கள் அதற்குள் சரிபார்த்து கொள்ள வேண்டும். பெயர் தவறவிட்டவர்கள் அல்லது புதிதாக சேரவிருப்பவர்கள், 11 ஆதார ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் இந்த பணிகள் எப்போது தொடங்கும் என்று கேட்டபோது தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமே எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணி தொடங்கும் தேதி அடுத்தவாரம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. இந்தப் பணியின்போது வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக வந்து விண்ணப்பப்படிவங்களை வழங்குவார்கள்.

முன்னதாக வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்து விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். பெயர் இடம்பெறாமல் இருந்தால், இந்திய தேர்தல் கமிஷன் குறிப்பிடும் 11 ஆவணங்களை விண்ணப்பத்துடன் சேர்த்து கொடுக்க வேண்டும். இந்த கால அவகாசத்தை பயன்படுத்தாவிட்டால் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க முடியாமல் போய்விடும் என்று தெரிவித்துள்ளனர்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை