திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழக்கு விழா வரும் ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பக்தர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கபட உள்ளது.
தூத்துக்குடி மாவடடத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினமும் லட்ஷக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.திருசசெந்தூர் முருகன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழக்கு விழா நடைப்பெற உள்ளது. அதன்படி ஜூலை 7-ம் தேதி அன்று காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால், கோயிலில் பராமரிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து பக்கதர்களுக்காக திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி ஜூலை 7-ம் தேதி நெல்லையில் இருந்து காலை 9.15 மணியளவில் புறப்படும் ரயிலானது 10.50 மணிக்கு பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர்,ஸ்ரீ வைகுண்டம், நாசரேத், குரும்பூர் மற்றும் ஆறுமுகநேரி உள்ளிட்ட ஊர்களின் வழியாக திருச்செந்தூர் சென்று அடையும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. மேலும் மேலே கூறப்பட்டுள்ள ஊர்களில் சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.