கோயில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு சென்ற காவலாளி அஜித்குமார் பலியான சம்பவம் குறித்து 5 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆசிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாக அஜித்குமார் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கோயிலுக்கு சென்ற நிகிதா என்பவருக்கு சொந்தமான 9.5 சவரன் நகை காணாமல் போய் உள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
போலீசார் கோயிலின் காவலாளியான அஜித்குமாரை விசாரணக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில் 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆசிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.