பெரிய சதி.. பீகார் தேர்தல் தோல்விக்கு SIR தான் காரணம் – அகிலேஷ் யாதவ்

SIR is responsible for Bihar election defeat - Akhilesh Yadav

பீகார், நவம்பர் 14:

பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.

இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியின் மிகப்பெரிய தோல்விக்கு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மற்றும் பாஜக தான் காரணம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

பீகாரில் எஸ்.ஐ.ஆர் ஒரு பெரிய தேர்தல் சதி என்றும், பாஜக அதைப் பயன்படுத்தி ஒரு பெரிய அரசியல் மோசடியைச் செய்ததாகவும் அகிலேஷ் குற்றம் சாட்டினார்.

மேலும், பீகாரில் செயல்படுத்தப்பட்ட SIR விளையாட்டை மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் தொடங்கி வேறு எந்த மாநிலத்திற்கும் கொண்டு வர முடியாது.

ஏனென்றால் இந்தத் தேர்தல் சதி இப்போது அதிகமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல், அவர்கள் இந்த விளையாட்டை மீண்டும் விளையாட நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

CCTV போல நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பாஜகவின் நோக்கங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு மோசடி” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு