சென்னை, பிப்ரவரி 18:
‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, விடுதலைப் போராளி – இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி – ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் பிறந்தநாள்.
தந்தை பெரியாருடன் குடிஅரசில் இணைந்த – பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலர் அவர்கள் !
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவருக்குச் சிலை அமைத்து, அந்த அலுவலகத்துக்குச் ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மாளிகை’ என்றே பெயரும் சூட்டியவர் நம் தலைவர் கலைஞர்.
இந்தியாவில் முதன்முறையாக மே-1 உழைப்பாளர் நாளை செவ்வண்ணக் கொடியேற்றிக் கொண்டாடி, தொழிலாளர் நலனுக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த சிங்காரவேலரின் புகழைத் தொடர்ந்து போற்றுவோம்! இனி வரும் தலைமுறைகளுக்குப் பாடமாகச் சொல்வோம்! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.