தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்ற கடைகளுக்கு அபாரதம்

Shops that sold banned plastic items were fined.

திருப்பூர், டிசம்பர் 30:

திருப்பூர் மாநகரில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளில் இருந்து 89 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மத்திய பஸ் நிலையம் பின்புறம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 5 கடைகளுக்கு ரூ. 9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடைகள் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பொதுமக்கள் துணிப்பைகள் பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை