உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசியதால் பரபரப்பு

Shoe thrown at Supreme Court judge

டெல்லி, அக்டோபர் 06:

உச்ச நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசி தாக்குதல் நடத்த முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் போது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் கூச்சலிட்டு, ‘சனாதனத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது’ என்று கூறினார்.

இதற்கு பின்னர், நீதிமன்ற பாதுகாவலர்கள் அந்த வழக்கறிஞரை உடனடியாக வளாகத்திலிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவத்தைப் பற்றி, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “கவனத்தை சிதறவிட வேண்டாம். இத்தகைய சம்பவங்கள் என்னை பாதிக்காது” என்றும் கூறினார்.

மேலும், மத்திய பிரதேசம் கஜுராகோவில் உள்ள ஜவாரி கோவில் வளாகத்தில் சேதமடைந்த விஷ்ணு கடவுளின் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என வழக்கு தொடர்ந்த ராகேஷ் தலால் என்பவருடைய மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான பெஞ்சின் முன் வந்தது, அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.

அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது. கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் கடுமையான பக்தர் என்று சொல்லிக் கொள்ளீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு சர்ச்சையானது. இதனையடுத்து நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கவாய் விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தான் அவர் மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!