முதலமைச்சருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்திப்பு!

Senior Congress leader P. Chidambaram meets the CM stalin

சென்னை, டிசம்பர் 23:

சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று(டிச. 23) சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பானது சுமார் 10 நிமிடங்கள் வரை நடைபெற்றதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்ததற்கு எதிராக ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். பாஜக அரசின் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் நாளை(டிச. 24) நாடு முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளது.

இந்நிலையில்தான் தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள், அரசியல் நிலவரங்கள் குறித்து முதலமைச்சருடன் ப. சிதம்பரம் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை!

நாங்குநேரி கொலை சம்பவத்திற்கு விஜய் கடும் கண்டனம்..!