சென்னை, செப்டம்பர் 06:
அதிமுகவில் உள்ள பொறுப்புகளில் இருந்து கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். இதனை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
செங்கோட்டையன் கடந்த காலமாக அ.தி.மு.க.விலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெடு விதித்த நிலையில், இந்த கருத்து மோதல் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்னணியில் இன்று எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதிமுக அமைப்புச் செயலரான செங்கோட்டையன் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் போன்ற செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டனர். தற்போது, செங்கோட்டையன் கோபி செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.