கோவை: செப்டம்பர் 09:
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடுவிதித்தார்.இதன் காரணமாக செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், செங்கோட்டையன் நேற்று டெல்லி சென்றார். கோவிலுக்கு செல்லவுள்ளனர் என்றும் மன நிம்மதிக்காக ஹரித்வாருக்கு போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதே நேரத்தில், அவர் பாஜக மூத்த தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஹரித்வாருக்கு செல்வது என கூறியதட்டும், அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. அமித்ஷாவயை சந்தித்து அனைவரையும் ஒருங்கிணைக்கவும், கட்சியை வலுப்படுத்தவும் பரிமாற்றங்கள் நடந்தன. இன்றைய அரசியல் சூழ்நிலையைப் பற்றி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மக்களுக்காகப் பணி செய்கிறேன், கட்சியின் வலிமையை அதிகரிக்க பணியை தொடர்கிறேன்” எனக் கூறினார்.