மதுரை, ஆகஸ்ட் 05:
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை “பேய், பிசாசு” என்று கடுமையாக விமர்சித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மக்கள் விழிப்பும் தழுச்சியும் இல்லாமல், கூட்டணி மூலம் மாற்றம் வராது என்று அவர் கூறினார்.
“பிசாசு வேண்டாம் என்று பேயை 5 ஆண்டுகள் கட்டிகொள்கிறார்கள். அதிமுக பயன்படுத்தி திமுக-வை எதிர்க்க முடியாது; தீமையை வைத்து இன்னொரு தீமைகளை அழிக்க முடியாது. மக்கள் விழித்தால் மட்டுமே மாற்றம் வரும், கூட்டணியால் அந்த மாற்றம் நிகழாது,” என அவர் தெரிவித்தார்.
மேலும் “அண்ணா வழியில் தான் திமுக 60 ஆண்டுகளாக பயணிக்கிறது; ‘அண்ணா வழி’ என்கிறார் விஜய், ஆனால் திமுக, அதிமுக இரண்டும் அண்ணா வழியில் ஒன்று தான். அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன புதிய கொள்கையை கொண்டுள்ளார்? விஜயகாந்தின் வருகையில் ஏற்பட்ட எழுச்சி போல ஏதும் இப்போது ஏற்படவில்லை. திரை வெளிச்சத்தில் வருபவர்களால் அரசியலில் மாற்றம் வரும் என நினைக்கக் கூடாது,” எனக் கூறினார்.
இவ்வாறு, தமிழகத்தின் பிரதான கட்சிகள் மற்றும் அரசியலில் புதியது என்று வரும் சுற்றுச்சூழல்களை சீமான் சீறிக் கண்டித்தார்.