ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

Seat-sharing talks with EPS: BJP targets southern districts

சென்னை, மார்ச் 02:

மதுரையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரியும், தமிழக தேர்தல் பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயல், மத்திய இணை மந்திரி எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரு தனியார் ஓட்டலில் சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது பா.ஜனதா போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாக தெரிகிறது. அதில் தென்மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிக தொகுதிகள் இடம் பிடித்துள்ளதாகவும், அதில் பல அ.தி.மு.க. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்றும் கூறப்படுகிறது. மேலும், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சில தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க பாஜக சார்பில் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல் பா.ம.க.. அ.ம.மு.க. உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த கூட்டம் சில நிமிடங்களில் முடிந்தது. கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து தெரிவிப்பதாக கூட்டணி தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும் கூறப்படுகிறது.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!

மதுரைக்கு வந்த பிரதமர் பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்: மு.க.ஸ்டாலின்