கடலூர், ஜூலை 8:
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் வேன் மீது நேரடியாக மோதியது. ரயில் மோதியதில் பள்ளி வேன் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் பள்ளிக் குழந்தைகள் பலர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.