டெல்லி, செப்டம்பர் 12:
நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உடல் மற்றும் மன ரீதியாக ஏமாற்றியதாக குற்றச்சாட்டு செய்ய கையொப்பமிட்டுள்ளார். இதற்கான புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில், சீமான் பாலியல் புகார் வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கியிருந்தார். இன்று அந்த மனு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து, உச்சநீதிமன்றம் சீமான் வரும் 24ம் தேதிக்குள் நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டுள்ளது. மன்னிப்பு கேட்க தவறின் போது, சீமானை கைது செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயார் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேலும், விஜயலட்சுமி சமரசமாக நீதிமன்றத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். சீமான், நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என உறுதியளிக்க வேண்டும் எனவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.பின்னர், இந்த வழக்கை வரும் 24-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்துள்ளது.