துரைமுருகனுக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பு

SC issues assets case against Durai Murugan

டெல்லி, செப்டம்பர் 22:

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி மீது 2006-2011 காலகட்டத்தில் வருமானத்தைவிட அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாக 2011-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வேலூர் நீதிமன்றம் முதலில் இருவரையும் விடுவித்தாலும், மேல்முறையீடாக உயர்நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

இந்நேரத்தில், இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ளும் சிறப்பு நீதிமன்றத்துக்காக மாற்றப்பட்டது. 2024-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி இதுபோன்ற வழக்குகள் அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என கொடுக்கப்பட்டு, துரைமுருகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை சிறப்பு நீதிமன்றம் பிடி ஆணையை பிறப்பித்தாரும், இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, சென்னை உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையை விடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் ஒழிப்பு துறை போலீசாருக்கு பதில் அளிக்க உத்தரவிட்டது.

இதனால், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி மீது நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்குக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, ஊழல் தடுப்பு மற்றும் ஒழிப்புத் துறை போலீஸார் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Related posts

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை!

நாங்குநேரி கொலை சம்பவத்திற்கு விஜய் கடும் கண்டனம்..!