சென்னை, அக்டோபர் 13:
தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு விற்பனை பாதுகாப்பாக நடைபெற வேண்டும் என தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாக அமைத்து வரும் தீவுத்திடலில் இந்த ஆண்டும் 30 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டாசு கடைகளில் விற்பனை இன்று காலை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
பட்டாசு விற்பனை அக். 21 ஆம் தேதி வரை நடைபெறும். இதற்காக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டாசு கடைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பட்டாசுகள் வாங்கும் வாய்ப்பை அளிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன.
இதன் மூலம் தீபாவளி பண்டிகை பொது மனித வாழ்வுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக துகாப்பான சூழ்நிலையில் பட்டாசு வாங்கும் வசதி ஏற்படும் என்று அமைச்சகம் கூறி உள்ளது.