வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ரூ.6,000 இலிருந்து ரூ.12,000 ஆக ஊதிய உயர்வு

2.74 lakh voters removed from the electoral roll in Kanchipuram.

சென்னை, நவம்பர் 19:

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கிய இந்த நடவடிக்கைகள் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீடிக்கின்றன. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்த விண்ணப்பிக்க வசதியாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாக்காளர் உதவி மையங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. இவை நவம்பர் 25-ம் தேதி வரை இயங்கும்.

இதற்கிடையில், பணி நெருக்கடி காரணமாக வருவாய் துறை சங்கம் வாக்காளர் திருத்தப் பணிகளை புறக்கணித்தது. இதனால், பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என அரசு அறிவித்தது. நிலைமையை சமநிலைப்படுத்தும் நோக்கில், அரசு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத் தொகை ரூ.1,000 இலிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, வாக்குச்சாவடி நிலை அலுவலரின் ஊதியம் ரூ.6,000 இலிருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளரின் ஊதியம் ரூ.12,000 இலிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை