இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

Russia President Putin is coming to India today

டெல்லி, டிசம்பர் 04:

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார்.

புதின் இன்று மாலை 6.35 மணிக்கு பாலம் விமானபடையின் தளத்தில் தரையிறங்குவார். அவரை மூத்த மத்திய அமைச்சர்கள் நேரில் வரவேற்றுவார்கள். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி இரவுவிருந்து ஏற்பாடு செய்து வரவேற்க உள்ளார்.

இந்த நிலையில் நாளை (டிசம்பர் 5) காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவரை வரவேற்கிறார்.

இதற்கு பின்னர் காலை 11.30 மணிக்கு டெல்லி ராஜபாதைக்கு சென்று, இந்தியத் தலைவர்களின் நினைவிடங்களில் மலர்வளையம் வைக்க முக்கிய மரியாதை செலுத்தப்பட உள்ளது.

அதன் பின் 11.50 மணியில் புதின் ஹைதராபாத் இல்லத்திற்கு சென்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடக்கும். அங்கு இரு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் 23-ஆவது ஆண்டு மாநாடு நடைபெறும். பகல் 1.50 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் புதினும் செய்தியாளர்களை சந்தித்து பின்னணி விவாதம் நடத்துவர்.

பின்னர் பிற்பகல் 3.40 மணிக்கு டெல்லியில் ரஷிய அரசு தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய இந்திய சேனலை புதின் திறக்க உள்ளார், பின்பு இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கும் விருந்திற்கு புதின் கலந்துகொள்வார்.

மேலும் இரவு 9 மணிக்கு பாலம் விமான படை தளத்தில் இருந்து புதின் மாஸ்கோவுக்கு புறப்படும்.

பிரதமர் மோடி மற்றும் புதின் சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையேயான பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த வருகை இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான உறவை உறுதிப்படுத்தும் முக்கிய கட்டமாக அமைகிறது.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு