கர்நாடகாவில் வங்கி ஊழியர்களைக் கட்டிப்போட்டு நகை , பணம் கொள்ளை

RS. 21 cr & gold jewellery looted from bank

கர்நாடகா, செப்டம்பர் 17:

கர்நாடகா மாநிலத்தில் உள்ள விஜயபுராவில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் சாட்சன் நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளையர்கள் ரூ. 21 கோடிக்கு மேற்பட்ட பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி மற்றும் கத்திகளை கொண்டு வங்கியில் நுழைந்து, அங்குள்ள ஊழியர்களைக் கட்டிப்போட்டு ரூ. 20 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வங்கிக் மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் விஜய்புரா காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மன் நிம்பர்கி, சந்தேக நபர்கள் போலி எண் தகடு கொண்ட சுசுகி மின் வாகனத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சியின்படி மர்ம கும்பல் மகாராஷ்டிரத்தில் உள்ள பந்தர்பூர் நோக்கிச் சென்றுள்ளனர்.

மேலும், விசாரணை நடந்து வருகிறது. சந்தேக நபர்களைப் பிடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு