ஐபிஎல் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், அந்த பதவியில் இருந்து விலக்கியுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளனர். இந்திய தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு 2025-ஆம் ஆண்டு அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். போட்டிக்கு முன்பு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டபோதும், வீல் சேரில் அமர்ந்தே பணியாற்றிய அவர் இந்த முடிவை எடுத்தார்
ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நீண்டகால உறவு இருக்கும்போதும், அணியின் உரிமையாளர்களிடம் அளிக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்புகளை மறுத்ததால் இந்த பதவி விலகலை எடுத்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மொத்த லீக் போட்டிகளில் 5 வெற்றிகளை மட்டுமே பெற்று என்பது குறிப்பிடதக்கது.