மான்செஸ்டர் , ஜூலை 24:
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டில் விளையாடிக் கொண்டிருந்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக மைதானத்தில் இருந்து அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த நிலையில் ராகுல் 47 ரன்னில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார், இதனையடுத்து களமிறங்க கேப்டன் கில் 12 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலுய்ம் ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்லிய சாய் சுதர்சன், பந்த் அதிரடியாக வி்ளையாடி கொண்டிருந்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப்பின் காலில் பட்டது. அதன்படி ரிஷப் வலி மீதமடைந்து ‘ரிட்டையா்டர் ஹட்’ முறையில் இருந்து வெளியேறி உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் பிசிசிஐ (BCCI) மருத்துவக் குழுவினர் தகவல் வெளியிட்டு, “ரிஷப் பந்துக்கு மருத்துவமனையில் முழுமையான ஸ்கேன் செய்யப்பட்டு, அவரது உடல்நிலையை நெருக்கமாக கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
அவரது காயம் மீண்டும் மேம்பட்டால் அடுத்த விக்கெட் விழுந்தவுடன் பேட்டிங்கிற்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. ஆனால், மாற்று வீரர் களமிறங்கினால், விதிகளின் படி பேட்டிங் செய்ய இயலாது, மாறாக பீல்டிங் மட்டுமே செய்ய முடியும்.
இதுவரை, கடந்த போட்டியில் காயத்தால் பந்த் வெளியேறியபோது, துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்நிலையில், இந்த போட்டியிலும் பந்த் விளையாட முடியாவிட்டால், துருவ்தான் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார் என தெரிய வருகிறது.