வெறும் ரூ.4.70 லட்சம் விலையில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் ரெனால்ட் க்விட்!

Renault Kwid with modern safety features at just Rs. 4.70 lakh

சென்னை, ஜூலை 17:

இந்திய சந்தையில் குறைந்த விலை வாகனங்களில் அதிக கவனம் பெற்ற ரெனால்ட் க்விட் கார், அண்மையில் விற்பனை குறைவால் கவலையை சந்திக்கிறது. 2015ம் ஆண்டு அறிமுகமான நிலையில், முதல் ஆறே ஆண்டுகளில் 4 லட்சம் கார்களும் விற்பனையாகியிருந்தது இந்த மாடல். ஆனால், கடந்த காலங்களில் விற்பனை மெதுவாகி விட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 3 இலக்க எண்ணிக்கையில் மட்டும்தான் ரெனால்ட் க்விட் கார் விற்பனையாகி கொண்டுள்ளது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதமும் ரெனால்ட் க்விட் காரின் விற்பனை மிகவும் மந்தமாகதான் இருந்துள்ளது. புதிதாக வெளியாகியுள்ள சமீப மாத சேல்ஸ் ரிப்போர்ட் தகவல்படி, 2025 ஜூன் மாதத்தில் ரெனால்ட் க்விட் கார் வெறும் 449 யூனிட்டுகள் தான் விற்பனையாகியுள்ளது. இது 2024 ஜூன் (603) மற்றும் மே (540) மாதங்களுடன் ஒப்பிட்டால் 26% மற்றும் 16.85% வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.

இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப விலை வெறும் 4.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 6.45 லட்ச ரூபாயாக இருக்கிறது. விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ரெனால்ட் க்விட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும், ஸ்டாண்டர்டாக 15 பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் 20.32 செ.மீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் என ஏகப்பட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.

எவ்வளவு குறைந்த விலையிலும், அதிகமான பாதுகாப்பு அம்சங்களும், நவீன வசதிகளும் வழங்கப்பட்டாலும், தற்போதைய நிலையில் ரெனால்ட் க்விட் காரின் விற்பனை சரிவடைந்து வருகிறது. அதனால், எதிர்காலத்தில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை சென்றடைய, நிறுவனம் புதிய திட்டங்களை அறிவிக்குமா என வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு