11
சென்னை, நவம்பர் 26:
நவம்பர் 29-ல் தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்யார் புயலாக உருவாகியுள்ளது. இந்தப் புயலால் தமிழத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாத சூழலில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.