அரியலூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

Red alert for 5 districts including Ariyalur today!

சென்னை, நவம்பர் 28:

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை, அரியலுர், சிவகங்கை, தூத்துக்குடி உள்பட 5 ஐந்து மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

கடலூர், பெரம்பலுர், திருச்சி, மதுரை விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 29ல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதோடு, நாளை சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேலூர், திருபத்தூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை