இந்தியாவில் வங்கிகளின் தலைமை வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியில் 28 உதவி மேலாளர், சட்ட அலுவலர் மற்றும் மேலாளர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 31ஆம் தேதிக்குள் பெறப்படும்.
இந்த அறிவிப்பின் படி, குரூப் ‘ஏ’ வகையில் உதவி மேலாளர் (ராஜ்பாஷா) பதவிக்கு 3 காலியிடங்கள், உதவி மேலாளர் (ப்ரோடோக்கால் மற்றும் பாதுகாப்பு) பதவிக்கு 10 காலியிடங்கள் உள்ளன. இதன் மாத சம்பளம் ரூ.62,500 ஆகும். குரூப் ‘பி’ வகையில் சட்ட அலுவலர் பதவிக்கு 5, தொழில்நுட்ப சிவில் இயக்குநராக 6 மற்றும் தொழில்நுட்ப எலக்ட்ரிக்கல் இயக்குநராக 4 காலியிடங்கள் உள்ளன. இப்பதவிகளின் மாத சம்பளம் ரூ.78,450 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள் பதவிக்கேற்ப வேறுபடும். பொதுவாகப் பொறியியல் (சிவில், எலக்ட்ரிக்கல்), பி.இ, பி.டெக், எல்.எல்.பி மற்றும் ஹிந்தியில் முதுகலைப்பட்டம் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு படிப்பில் இளநிலை பட்டம் பெற்றிருப்போர் விண்ணப்பிக்க முடியும்.வயதுவரம்பு 1.7.2025 தேதிக்கேற்ப 21 முதல் 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப விரிவான விவரங்கள் மற்றும் நிபந்தனைகள் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.