விழுப்புரம், செப்டம்பர் 11:
பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணியை நீக்குவதற்கு ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகி மற்றும் வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார்.
அன்புமணிக்கும் ராமதாஸூக்கும் இடையேயான கடும் கருத்து மோதல்கள் பாமகவில் தொடர்கின்றன. கடந்த மாதம் 19-ந் தேதி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற குழு கூட்டத்தில், அன்புமணிக்கு மேல் முன்வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க ஆகஸ்ட் 31-க்குள் அறிவித்திருந்தார். பதிலளிக்காததால் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டும் பதில் வழங்கப்படவில்லை.
பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நோட்டீசுக்கு அன்புமணிக்கு அளிக்கப்பட்ட பதிலளிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிந்தும், அவர் பதில் அளிக்கவில்லை. இதன்பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “நோட்டீசுக்கு பதிலளிக்காததால் அன்புமணி குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக கருதுவதாகவும், அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்குகிறேன்” என்று ராமதாஸ் கூறினார்.
இதற்கு பதிலாக அன்புமணி, செய்தியாளர்களிடம் “எனக்கு இதைப்பற்றி பேசுவதற்கும் வேறு முக்கிய பணிகள் உள்ளன. வழக்கறிஞர் பாலு விளக்கம் அளிப்பார்” என்று கூறினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் கே. பாலு, “பாமக கட்சி விதிகளின்படி ராமதாஸ் நிறுவனர் கட்சியின் நிர்வாக பணிகளை செய்ய அதிகாரம் இல்லை. பொதுக்குழு தேர்ந்தெடுத்த தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது” என்று தெளிவுபடுத்தினார்.
மேலும்