டெல்லி, செப்டம்பர் 18:
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனை இந்திய தேர்தல் ஆணையம் முற்றிலுமாக நிராகரித்தது.
இதனையடுத்து பீகாரில் “வாக்காளர் அதிகார யாத்திரை” எனும் பேரணியை முன்னிட்டு, வாக்கு திருட்டு குற்றச்சாட்டோடு ராகுல் காந்தி விழிப்புணர்வு பணியை மேற்கொண்டார். இதேபோல் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து வாக்கு திருட்டு நிகழ்வுகளை வெளிப்படுத்தினார்.
ராகுல் கூறியதாவது, “நான் 100 சதவீத உண்மையை மட்டுமே கூறுகிறேன். என் நாட்டை, அரசியலமைப்பை, ஜனநாயகத்தை நேசிப்பவன் நான். ஆதாரபூர்வமாக இல்லாத எந்த தகவலையும் நான் இங்கே கூற மாட்டேன். கர்நாடகாவில் ஆலந்து தொகுதியில் 2023 தேர்தலில் 6,018 வாக்காளர்கள் வாக்குரிமையை நீக்க முயன்றனர். இதற்குமான விசாரணையில் வாக்குச்சாவடி நிலை அதிகாரி தற்செயலாக இந்த காட்டையை கண்டுபிடித்தார். என்னால் தெரியாத மற்றவர்கள் கூட வாக்குகளை நீக்கியிருக்க வாய்ப்பு உள்ளது.”
ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன, இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக இது காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையம் ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது . இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளேன். இனி இந்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் தான் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்க வேண்டும்” என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.