வாக்கு திருட்டில் பாதிக்கப்பட்டவர்களை மேடையில் ஏற்றி ஆதாரத்தை வெளியிட்ட ராகுல்

Rahul brought the victims on stage evidence

டெல்லி, செப்டம்பர் 18:

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாட்களில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. அதையடுத்து, பீகாரில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நடத்தி வாக்கு திருட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, வாக்கு திருட்டால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் வரவைத்து மேடையில் உண்மை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, யாருடைய பெயரில் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதோ அவர்களை ஊடகங்களுக்கு நேரில் காட்டினார்.

இதில் குறிப்பாக 63 வயது கொதாபாய் என்ற பெண்ணின் பெயரில் 15 வாக்காளர்கள் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளதாகவும், அது எப்படி நடந்தது என்பது அவரை அணுகி கேட்ட விசாரணை வீடியோவையும் ராகுல் காந்தி வெளியிட்டார்.

ராகுல் தொடர்ந்து, “தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இரண்டு விண்ணப்பங்கள் 36 வினாடிகளில் தாக்கல் செய்யப்பட்டன. நீங்கள் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்,” என இளைஞர்களுக்கு சவால் விடுவதாகத் தெரிவித்தார்.

“தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடியை 100% ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன். இந்தியாவை காப்பாற்றுவது இனிமேல் இந்தியர்களின் கையில் உள்ளது. நான் வாசல் வந்து உண்மையை சொல்வேன்; ஆனால் முடிவு மக்களிடம்தான் உள்ளது” என்றும் வலியுறுத்தினார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!