இஸ்ரேலுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்: கத்தார் பிரதமர்

கத்தார், செப்டம்பர் 12:

காசா மையமாக கொண்டு செயல்படும் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிராக பல உலக நாடுகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸின் பேச்சுவார்த்தைக் குழுவை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டதாகவும் கத்தார் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆனால், தங்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று ஹமாஸ் தெரிவித்தது.

இந்த தாக்குதல், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதியில் நடைபெற்ற தாக்குதல் மற்றும் சமீபத்தில் ஜெருசலேமில் 6 பேர் கொல்லப்பட்டதுக்கு பதிலாக நடந்தது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இஸ்ரேல் தாக்குதல் குறித்து உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ள நிலையில், கத்தார் பிரதமர் அல்-தானி, நட்பு நாடுகளுடன் ஒன்று சேர்ந்தும் இஸ்ரேலுக்கு வலுவான பதிலடி வழங்க திட்டமிட்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். இதற்கு மேலும், அரபு-இஸ்லாமிய உச்சி மாநாடு விரைவில் நடைபெறும் என்றும், அந்த மாநாட்டில் எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவுகளாகும் என்றும் தெரிவித்தார்.

RELATED NEWS

Latest News